Published : 22 Nov 2023 04:06 AM
Last Updated : 22 Nov 2023 04:06 AM
சிவகாசி: 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பட்டாசுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
விருதுநகர் வந்த அவரிடம் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் ( டான்பாமா ) தலைவர் கணேசன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது, சட்ட விரோதமாக பட் டாசு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பேரியம் நைட் ரேட் மற்றும் இணைப்பு பட்டாசுகளை ( சரவெடி ) பயன்படுத்துவதைத் தடை செய்து உள்ளது. இதனால் தற்போது பட்டாசு ஆலைகளில் 40 சதவீத பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உள்ளது. பட்டாசுத் தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பின் தங்கிய 112 மாவட்டங்களில் விருதுநகரும் ஒன்று. ஆனால், மாவட்டத்தின் பிரதானமான பட்டாசுத் தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. பேரியம் நைட் ரேட் மட்டுமே பச்சை நிறத்தை உருவாக்குகிறது. பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட் ரேட்டுக்கு வேறு மாற்று இல்லை.
உலகில் வேறு எந்த நாடும் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட் ரேட் பயன்பாட்டைத் தடை செய்யவில்லை. வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பேரியம் நைட் ரேட் பயன்படுத்தாமல் 50 முதல் 60 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று தெளி வாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பட்டாசு உற்பத்திக்கு எதிராக மனு செய்தவரின் தவறான தகவல்களால் உச்ச நீதிமன்றம், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தடை விதித்துள்ளது. பட்டாசுக் குழாயின் அளவைக் குறைத்து, குறைந்த அளவிலான வேதிப் பொருளை பயன்படுத்தி சிஎஸ்ஐஆர் - நீரி வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட இணைப்பு பட்டாசுகளில், புகை வெளியீடு 30 சத வீதம் வரை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.
புதிய ஃபார்முலா படி பின்னப் பட்ட இணைப்புப் பட்டாசுகளில் ஒலி அளவு 125 டெசிபலுக்கும் குறைவாக இருப்பது சிஎஸ்ஐஆர் - நீரி நடத்திய சோதனையில் உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசுத் தொழில், இக்கட்டான சூழலில் உள்ளது.
சிஎஸ்ஐஆர்- நீரி சார்பில் குறைந்த அளவிலான பேரியம் நைட் ரேட் பயன்படுத்தி இணைப்புப் பட்டாசுகளை உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். இந்தக் கோரிக்கையை அவசரத் தேவையாகக் கருதி பட்டாசுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜா சந்திர சேகர் அளித்த மனுவில், பண்டிகைக் காலங்களில் மாசுக் கட்டுப் பாட்டுச் சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசுக் கடைகளுக்கு மாதிரிச் சட்டம் உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT