Published : 27 Jan 2018 08:47 AM
Last Updated : 27 Jan 2018 08:47 AM

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கண் பரிசோதனை முகா மில் 346 பேர் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொது சுகாதாரத் துறை மற்றும் பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணிபுரியும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் உதி கண் மருத்துவமனை, எம்.என். கண் மருத்துவமனை மற்றும் இந்தியா விஷன் ஆகியவை இணைந்து பரிசோதனைகளை மேற்கொண்டன.

இம்முகாமில் கண் புரை, கண் நீரழுத்த நோய், கண் பார்வை குறைபாடு, விழித்திரை பாதிப்பு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகா மில் மொத்தம் 346 பணியாளர் கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இப்பரிசோதனையில் பார்வை குறைபாடு உள்ளவர் கள் 252 பேர், கண் புரை குறை பாடு உள்ளவர்கள் 17 பேர், கண் நீரழுத்த நோய் உள்ளவர்கள் 11 பேர், இதர குறைபாடு உள்ளவர்கள் 66 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x