Last Updated : 24 Oct, 2023 03:55 PM

2  

Published : 24 Oct 2023 03:55 PM
Last Updated : 24 Oct 2023 03:55 PM

உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்படத் தயார்: சீமான் கருத்து

விழுப்புரம்: நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது, "தமிழர்களின் வரலாற்றை ஆளுநர் ரவி திரித்து பேசுகிறார். மகளிர் மசோதாவை செயலாக்கம் செய்யுமா பாஜக..? வெறும் பேச்சு தான்..அக்கட்சியில் 33% ஒதுக்கீடு உள்ளதா...?, இது காதில் தேன் ஊற்றும் வேலை. நீட் தேர்விற்கு எதிராக திமுக கையெழுத்து பெறுவது என்பது ஏமாற்றும் வேலை. வெறும் நாடகம்.

நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்கி விட்டார்கள். கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்.. பிறகு யாரிடம் கொடுப்பது..? எல்லாம் நாடகம் தான்.தேர்தலுக்கான, கட்சிக்கான அரசியலை தான் திமுக நடத்துகிறது. மக்களுக்கான அரசியல் இல்லை. ஆந்திராவில் தெலுங்கராகவும், கர்நாடகாவில் கன்னடனாகவும், கேரளாவில் மலையாளியாகும் இருப்பர்கள் தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடனாக இருக்கவேண்டும்.

எத்தனை முகமூடிகள் மாட்டுவீர்கள். இந்தியா தேசமே இல்லை. பல தேசங்களில் ஒன்றியம் தான். ஐரோப்பிய யூனியன் போல, இந்திய யூனியன்தானே? ஒரே நாடு என்றால் நமக்கு தண்ணீர் தர வேண்டுமே, ஏன் தண்ணீர் தரவில்லை. அப்புறம் எப்படி ஒரே நாடு? மத்திய, மாநில அரசு இரண்டுமே மக்களுக்கான அரசு இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் எடுக்க வேண்டும். முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை.

எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது. நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார். அவர் வர வேண்டும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் அவரது கொள்கைகளை சொல்ல வேண்டும், நான் தான் முன்னாடி நிற்கும் அண்ணன் அவர் தான் என்னோடு வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும், நான் போய் கேட்க முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என அவரிடம் கேளுங்கள்.

தங்களின் வலிமை காண்பிக்கவே பாஜக அமலாகத்துறை ரெய்டும், திமுக பா.ஜ.க-வினரை கைது செய்வதும் நடைபெறுகிறது, வருகின்ற தேர்தலுக்கான இந்த ரெய்டு கைதெல்லாம் நடைபெறுகிறது என்றும் விளம்பரத்துக்காக பேசும் ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும் தமிழக ஆளுநர் ரவி அடிப்படையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் அவர் விளம்பரத்துக்காக தினம், தினம் ஏதோ ஒரு கருத்தை கூறி வருகிறார். அவரை நாம் தவிர்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x