Published : 24 Oct 2023 05:59 AM
Last Updated : 24 Oct 2023 05:59 AM

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தகவல்

கோப்புப்படம்

சென்னை: இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது. இதனை தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்றுடன் தொடர் விடுமுறை (ஆயுத பூஜை) நாட்கள் முடிய உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பலரும் ஊர் திரும்ப பேருந்துக்கு முன்பதிவு செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 119 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன. இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதமும் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x