Published : 20 Oct 2023 05:40 AM
Last Updated : 20 Oct 2023 05:40 AM

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள்: அக்.25-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ளது. தமிழகத்தில் வரும் அக்.27-ம் தேதி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறிதது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின் ஒரு பகுதியாக வரும் 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த சூழலில், வரும் அக்.25-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகளும் பங்கேற்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில், பொதுமக்கள் வசதிக்காக நவ 4, 5 மற்றும் 18, 19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்தாண்டு ஜன.5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x