Published : 09 Jan 2018 10:14 AM
Last Updated : 09 Jan 2018 10:14 AM

இனி பேச்சு இல்லை: அமைச்சர் - பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி:

ஒப்பந்தத்தை ஏற்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்தத்தின்படி, குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரத்து 684-ம், அதிகபட்சம் ரூ.11 ஆயிரத்து 361-ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை ரூ.204 கோடி பொங்கலுக்குள் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.380 கோடியும் விரைவில் வழங்கப்படும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், இனி பேச்சுவார்த்தை இல்லை.

உடனடியாக..

இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நிர்வாகம் தயங்காது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x