Published : 28 Dec 2017 03:42 PM
Last Updated : 28 Dec 2017 03:42 PM

காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?- தேர்வுத்துறை விளக்கம்

தமிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் முறைப்பற்றி சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்த சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் ( grade-2 constable) (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்). சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாகவுள்ள 216 தீயணைப்போர் (ஆண்) மற்றும் 46 பின்னடைவு காலிப்பணியிடங்களும் சேர்த்து மொத்தமாக 6140 காலிப்பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இத்தேர்வில் முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2018 ஜனவரி 27. இக்குழுமத்தில் ஒரு உதவி மையம் காலை 09,00 மணி முதல் மாலை 06,00 மணி வரை செயல்படும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏதேனும் உதவி தேவையனில் விண்ணப்பதாரர்கள் உதவிக்கு தொலைபேசி எண்கள் 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 மற்றும் 9789035725- எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோன்ற. உதவி மையம் மாநகரத்திலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கும்.

இவ்வாறு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x