Published : 05 Dec 2017 04:55 PM
Last Updated : 05 Dec 2017 04:55 PM

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு

திரையரங்குகளில் வாகன நிறுத்தக்  கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சிகள்/ சிறப்பு நிலை நகராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

நகராட்சிகள், இதர நிலை நிலை நகராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் சைக்கிள்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவிப்பானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணத்தை குறைத்துள்ள தமிழக அரசுக்கு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x