Published : 21 Dec 2017 09:08 AM
Last Updated : 21 Dec 2017 09:08 AM

ஜெ. சிகிச்சை வீடியோ உரிய நடவடிக்கை தேவை: பாஜக சார்பில் லக்கானியிடம் மனு

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை நேற்று டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாஜக சார்பில் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் ஆர்.சவுந்தரராஜன், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், ஆர்.கே.நகர் வாக்குப் பதிவு நடக்க உள்ள நிலையில், தினகரன் ஆதரவாளர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது, வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வீடியோவை ஒளிபரப்பாமல் தடை செய்வதுடன், வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x