Published : 09 Sep 2023 03:06 PM
Last Updated : 09 Sep 2023 03:06 PM

மக்களை மறுகுடியமர்வு செய்வது குறித்து தெங்குமரஹாடா கிராமத்தில் அரசு செயலர் ஆய்வு

ஈரோடு: அடர்வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா கிராம மக்களை மறுகுடியமர்வு செய்வது குறித்து வனத்துறை செயலர், ஈரோடு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில், மாயாற்றின் கரையில், அடர்ந்த வனப்பகுதியில் தெங்கு மரஹாடா கிராமம் அமைந் துள்ளது.

வன விலங்குகள் நலன் கருதி, இக்கிராம மக்களைக் காலி செய்து மறுகுடியமர்வு செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கிராம மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 10-ம் தேதிக்குள், தெங்கு மரஹாடா கிராம மக்களை மறு குடியமர்வு செய்வது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

497 குடும்பங்கள்: இதையடுத்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர். இதற்கிடையே, தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வனத்துறை அதிகாரிகள், தெங்குமரஹாடா கிராமத்துக்கு சென்று மறு குடியமர்வு செய்வது குறித்து கிராம மக்களுடன் கலந்துரையாடினர்.

அதைத்தொடர்ந்து, வனத் துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை மறு குடி யமர்வுக்காக ஒதுக்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த இடத்தில், தெங்கு மரஹாடாவில் வசிக்கும், 497 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப் படவுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x