Published : 05 Sep 2023 05:20 AM
Last Updated : 05 Sep 2023 05:20 AM

ரூ.1,000 கோடியில் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்

சென்னை: அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை ரூ.1,000 கோடியில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் மற்றும் இந்த ஆண்டுக்குரூ.200 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டசெய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில், கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், “நகர்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, முழுமையான சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுதிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது” என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடிக்கான நிர்வாக அனுமதி மற்றும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x