Published : 01 Sep 2023 06:17 AM
Last Updated : 01 Sep 2023 06:17 AM

நிரந்தர கட்டணம் நிர்ணயிக்கக் கோரி வாடகை வாகன நிறுவன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: நிரந்தர கட்டணம் நிர்ணயிக்கக் கோரி பன்னாட்டு வாடகை வாகன நிறுவன ஓட்டுர்கள் நேற்று சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: பன்னாட்டு நிறுவனங்களில் இணைந்து வாடகை வாகனங்களை இயக்குவோருக்கு உரிய ஊதியம்வழங்கப்படுவதில்லை. டீசல் கட்டணம் ரூ.50-க்குள்ளாக இருந்தபோது வழங்கப்பட்ட தொகையே தற்போதும் வழங்கப்படுகிறது.

மேலும், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வாடகையில் மாற்றம் செய்யப்படுவதில்லை. அப்படியே மாற்றப்பட்டாலும் அதற்கான தொகை ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கிமீ-க்கு ரூ.12, 13 என்றளவில் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் பீக்ஹவர்ஸ் எனப்படும் அலுவலக நேரத்தில் பன்மடங்கு கட்டணத்தையும், நள்ளிரவு நேரத்தில் சொற்பதொகையும் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

இதனால் நாங்கள் மட்டுமல்லபொதுமக்களும் பாதிப்படைகின்றனர். எனவே, ஒரு கிமீ-க்குமினிவகை கார்களுக்கு ரூ.23,செடான் வகை கார்களுக்கு ரூ.25, எஸ்யூவிவகை கார்களுக்கு ரூ.35 வீதம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x