Published : 26 Dec 2017 10:28 AM
Last Updated : 26 Dec 2017 10:28 AM

பொது சேவை மையம் மூலம் உணவு வணிகர்கள் 31-ம் தேதிக்குள் உரிமம் பெறலாம்: மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

அனைத்து உணவு வணிகர்களும் உரிமம், பதிவுச் சான்றிதழை பொது சேவை மையங்கள் மூலம் பெறலாம் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதி காரி கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். தள்ளுவண்டி கடைகள், உணவு விடுதிகள் என உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெற வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் ரூ.100 செலுத்தி அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் மேல் வணிகம் செய்யும் செய்யும் சிறு வணிகர்கள், உணவு விடுதிகள் உரிமக் கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கட்டணங்களை DPC 0210-04-800-AM-0008 என்ற கணக்கு தலைப்பில் சலான் மூலம் கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கருவூலக் கிளையில் செலுத்த வேண்டும்.

இதுதவிர, பொது சேவை மையத்திலும் பதிவு சான்றை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சேவை மையத்தை gis.csc.gov.in/locator/csc.aspx என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044- 23813095 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x