நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு: ராமேசுவரத்தில் இன்று வேலைநிறுத்தம்

நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு: ராமேசுவரத்தில் இன்று வேலைநிறுத்தம்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை நெடுந்​தீ​வில் தஞ்​சம் அடைந்த 11 தமிழக மீனவர்​கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை​ நீதி​மன்​றக் காவலில் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இதைக் கண்​டித்து ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் இன்று ஒரு​நாள் (சனிக்​கிழமை) அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் அறி​வித்​துள்​ளனர்.

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து புதன்​கிழமை கடலுக்​குச் சென்ற ரமேஷ் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகு சூறைக்​காற்​றி​னால் இயந்​திரப் பழுது ஏற்​பட்டு நெடுந்​தீவு அருகே தரைதட்டி நின்​றது. படகி​லிருந்த ரமேஷ், அமல தீபன், கெர்​சின் ரிஷப், ஹென்றி ரோகித், ஜான் ரிச்​சர்ட், வெள்​ளைச்​சாமி, அந்​தோணி ஆனந்த், ரோகன், சீமன், ஆரோக்​கிய அசோக், பெரியகருப்​பன் ஆகிய 11 மீனவர்​கள் வியாழக்​கிழமை காலை நெடுந்​தீ​வில் கரை ஒதுங்​கிய நிலை​யில் அவர்​களை நெடுந்​தீவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட 11 மீனவர்​களும் நேற்று (வெள்​ளிக்​கிழமை) ஊர்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டனர். பின்னர் அவர்கள் ஆக. 21 வரை​ நீதி​மன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறை​யில் அடைக்கப்​பட்​டனர். இந்​நிலை​யில் ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், நெடுந்​தீ​வில் கரை ஒதுங்​கிய 11 தமிழக மீனவர்​களை​யும் விடு​தலை செய்ய வலி​யுறுத்தி இன்று (சனிக்​கிழமை) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போ​ராட்​டம் நடத்​தப்​போவ​தாக அறி​வித்​துள்​ளனர்​.

நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு: ராமேசுவரத்தில் இன்று வேலைநிறுத்தம்
ஜனநாயகக் குரலாக ‘ஜந்தர் மந்தர்’ மாறியது எப்படி? - டெல்லி போராட்டக் களத்தின் கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in