

சென்னை: காவல் ஆய்வாளர்கள் 11 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் 11 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் முக்கியமாக செம்பியம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், துரைப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் எஸ்.பிரபு எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் விமல் துரைப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மகேஷ் குமாருக்கு மீனம்பாக்கம் குற்றப்பிரிவும், மோகன்தாஸுக்கு கோட்டூர்புரம் சட்டம்-ஒழுங்கு பிரிவும் வழங்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 11 காவல் ஆய்வாளர்களும், ஓரிரு நாட்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.