Published : 09 Nov 2017 08:42 PM
Last Updated : 09 Nov 2017 08:42 PM

குட்டிக்கதை மூலம் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் பழனிசாமி

தேனியில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சிவன் பார்வதி தேவி கதையைக் கூறிய முதல்வர் பழனிசாமி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார்.

முதல்வர் பழனிசாமி கூறிய குட்டிக்கதை:

''ஒரு ஊரில் ஒரு சிறுவன் மரத்தில் ஏறி கிளையில் அமர்ந்து கொண்டு அதன் அடிப்பாகத்தை வெட்டிக் கொண்டிருந்தான். கிளை முறியப்போகிறது என அவனுக்கு தெரியவில்லை. இதை விண்ணில் இருந்து பார்த்த பார்வதி தேவி, சிவபெருமானிடம் சில நிமிடங்களில் கிளை முறியப்போகிறது. எல்லோருக்கும் தாய், தந்தையாக விளங்கும் நாம் தான்

அவனை காப்பாற்றவேண்டும் என்றார்.

சிவபெருமானோ அவன் விழட்டும் பார்க்கலாம் என்றார்.

அவன் விழும்போது அம்மா என்றால் நீ தாங்கிப்பிடி, அப்பா என்றால் நான் காப்பாற்றிவிடுகிறேன் என்றார்.

கிளை முறிந்து சிறுவன் விழுந்துகொண்டிருந்தான். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் அய்யோ என்று அலறினான். அவனை இருவரும் காப்பாற்றவில்லை. அவன் நாக்கிற்கு நல்ல பயிற்சி கொடுக்கவில்லை. இதனால் அய்யோ என்று கத்தியுள்ளான்.

இதுபோன்று நீங்கள் மக்கள் மனதில் இருந்து விழுந்துவிட்டீர்கள். இதை யாருக்கு சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு புரியும்'' என்றார் முதல்வர் பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x