Published : 25 Nov 2017 10:09 AM
Last Updated : 25 Nov 2017 10:09 AM

அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில்ஆதார் எண் பதிவு செய்யும் வசதி அறிமுகம்

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எண் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை, ஆதார் எண் பதிவு செய்யும் சேவையை இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்புடன் (UIDAI) இணைந்து அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவை தமிழகத்திலுள்ள மேலும் 1,434 அஞ்சலகங்களுக்கு படிப்படியாக ஓரிரு மாதங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த வசதி திருச்சி, மதுரை, கோவை, நாகர்கோவில், நெல்லை, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் பாண்டிச்சேரி தலைமை அஞ்சலகங்களில் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்திலுள்ள 70 அஞ்சலகங்களில் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யும் வசதி ஜூலை 2017 முதல் அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 14,756 திருத்தங்கள் நடைபெற்றுள்ளன.

வங்கிகள், அலைபேசி சேவை நிறுவனங்கள், அஞ்சலக வங்கிகள், சமையல் எரிவாயு விநியோகிப்பவர்கள், தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வருமான வரி தாக்கல் செய்யவும், ரேஷன் அட்டை வாங்கவும் இப்போது ஆதார் எண் கட்டாயம் வேண்டும்.

புதிதாக ஆதார் எண் பதிவு செய்ய வெகு சில இடங்களே இருந்தன. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்களைத் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திலேயே செய்து கொள்ளலாம் என அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x