Published : 06 Nov 2017 09:29 AM
Last Updated : 06 Nov 2017 09:29 AM

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்கிறார்

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) நேரில் சந்திக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். இதையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது பயணத்தின் ஒருபகுதியாக அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார். இது தொடர்பாக பாஜக தேசிய செயலர் முரளிதரராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை சந்திக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

— P Muralidhar Rao (@PMuralidharRao) November 6, 2017

கடந்த ஓராண்டு காலமாக திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று அவரை பிரதமர் மோடி சென்று சந்திக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x