மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
Updated on
1 min read

சென்னை: ​மார்ச் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறு​தி​யளித்​ததை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்​கள் அறி​வித்த போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது.

தமிழகத்​தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்​வகித்து வரும் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்​வீஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் ஓட்​டுநர்​கள், மருத்​துவ உதவி​யாளர்​களுக்கு முறை​யான ஊதி​யம் வழங்​கப்​பட​வில்லை என்று புகார் தெரிவிக்​கப்பட்டு வந்த​து.

இதையடுத்​து, திமுக​வின் தொழிற்​சங்​க​மான தமிழ்​நாடு 108 அவசர ஊர்தி தொழிலா​ளர் முன்​னேற்ற சங்​கத்​தினர், பல்​வேறு கட்​டப் போராட்​டங்​களை முன்​னெடுத்​தனர். சென்​னை​யில் டி.எம்​.எஸ். வளாகத்​திலிருந்​து, முதல்​வர் இல்​லம் நோக்கி மாபெரும் பேரணி நடத்​தப்​போவ​தாக அறி​வித்​திருந்​தனர்.

இதையடுத்​து, அமைச்​சர்​கள் மற்​றும் அதி​காரி​கள், தொழிற்​சங்​கப் பிர​தி​நி​தி​களு​டன் மூன்று நாட்​களாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இப்பேச்​சு​வார்த்​தை​யில் சுமூகத் தீர்வு எட்​டப்​பட்​டுள்​ளது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெற்றதாக சங்​கச் செய​லா​ளர் இருளாண்டி தெரி வித்தார்.

மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
கொருக்குப்பேட்டையில் ரூ.96 கோடியில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in