Published : 11 Nov 2017 03:53 PM
Last Updated : 11 Nov 2017 03:53 PM
நடிகர் சிம்பு பண மதிப்பு நீக்கத்துக்கு எதிராக சொந்தக்குரலில் பாடிய “தட்றோம் தூக்றோம்” பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முதன் முதலில் குரல் கொடுத்து, படித்த இளைஞர்களை சாலைக்கு வந்து போராட குரல் கொடுத்தவர் சிம்பு. இதனால் டைடல் பார்க் முதல் ஐடி துறையில் உள்ள இளைஞர்கள் வரை சகலரும் போராட்டத்தில் குதிக்க சிம்புவின் அழைப்பும் தூண்டுகோலாக இருந்தது.
பணமதிப்பு நீக்கத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் கடைபிடித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக சிம்புவும் சொந்தக்குரலில் பாடலொன்றை பாடியுள்ளார். யூடியூபிலும், இணையத்திலும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. கபிலன் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் இதுதான்.
காந்தி நோட்டு ரெண்டும் அம்பேல் ஆகி போயாச்சு
வாழ்க்கை ஏடிஎம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சு
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவில் வந்தாச்சு
காத்துக் கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு
நடுத்தரத்த.. நல்லா வச்சு செஞ்சாச்சு...
சில்லறைக்குதான் டங்குவாரு அந்தாச்சு
மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க
பாரீ...னுதான் போயாச்சு
நோ கேஷ்... கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
நோ கேஷ்... கேள்வி கேட்காம கொண்டாடலாம்
நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ்
பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்
கண்ணே தொறக்காம படம் பார்க்கலாம்…
ஃபேக்கு நோட்டு போல் வாழ்க்கை மாறிப் போயாச்சு
பிரேக்கிங் நியூஸப் பாத்து
லூசு மோஷன் ஆயாச்சு
வெள்ள மனசு சேத்த பணம்
செல்லாமலேயே போயாச்சு
கருத்த மனசு சேத்த பணம்
வெள்ளை கலர் ஆயாச்சு
குடிமகனா ஒத்துழைப்ப தந்தாச்சு
கண்டபடிக்கு நம்பிக்கையா வச்சாச்சு
வரிசையில பெரிசு சிறுசு எல்லாருமே நின்னாச்சு
முடிஞ்சுதுனு நெனச்சாக்கா ஜிஎஸ்டி வந்தாச்சு
நோ கேஷ்… கார்ட ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
ஏழை வீட்டில் இருப்பதெல்லாம்
சிவப்பு பணமடா
குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா
நாட்ட மாத்த வேணுமுனு
நீங்க நெனச்சா
கோட்டு போட்ட குண்டர்களின் சங்கப்புடிங்கடா
நோ கேஷ்... கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
நோ கேஷ்... கேள்வி கேட்காம கொண்டாடலாம்
பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்
நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ்
கண்ணே தொறக்காம படம் பார்க்கலாம்
டீமானிடைசேஷன் டீமானிடைசேஷன் டீமானிடைசேஷன்
மாறும்மா நம்ம நேஷன், கேள்வி கேட்டா போலீஸ் ஸ்டேஷன்
இது கோலுமாலு குளோபலைசேஷன் ஆயாச்சு
இது கோலுமாலு குளோபலைசேஷன்
இது கோலுமாலு குளோபலைசேஷன்
இது கோலுமாலு குளோபலைசேஷன்
ஒரே கன்பியூஷன்.... என்ன வாழ்க்கைடா இது.
மேற்கண்ட வரிகளில் சிம்பு பாடிய பாடல் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் பாடல் மேலும் வைரலாகுமெனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT