Published : 10 Nov 2017 09:56 AM
Last Updated : 10 Nov 2017 09:56 AM

சிறப்பு எம்பிஏ படிப்பு சென்னை ஐஐடி அறிமுகம்

பணியில் உள்ளவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் படிக்கும் வகையிலான சிறப்பு எம்பிஏ படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற் கான நுழைவுத்தேர்வுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

பணியில் இருப்பவர்கள் படிக்க வசதியாக ஐஐடியின் நிர்வாகவியல் துறை 2 ஆண்டுகால சிறப்பு எம்பிஏ படிப்பை (Executive MBA) அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய தேவை, டிஜிட்டல் பொருளாதாரம், எதிர்கால உற்பத்தி, சர்வதேச உத்தி போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய எம்பிஏ படிப்பு இருக்கும். இதற்கான வகுப்புகள் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம், வாரஇறுதி நாட்களில் (அதாவது சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்) நடைபெறும். சிறந்த, நீண்ட அனுபவம் வாய்ந்த பேராசியர்கள் வகுப்பு எடுப்பார்கள். அடுத்த ஆண்டு ஜனவரியில் வகுப்புகள் தொடங்கும்.

நவம்பர் 30 கடைசிநாள்

பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://doms.iitm.ac.in/emba) விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x