Published : 10 Nov 2017 09:12 AM
Last Updated : 10 Nov 2017 09:12 AM

5 தாலுகாக்களில் இன்று அம்மா திட்ட முகாம்

அயனாவரம், கிண்டி, புரசைவாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை ஆகிய 5 தாலுகாக்களில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் - அம்மா திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் இன்று 10-ம் தேதி 5 தாலுகாக்களில் முகாம் நடக்கிறது.

இதில், பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புதிட்டங்கள், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படும். மேலும், மாநகரட்சி சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்,கால்நடை மருத்துவத்துறை மூலம் கால்நடை மருத்துவ முகாம், குடும்ப அடடை, குடிநீர் பிரச்சினைகள், நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில், அயனாவரம் கோட்டம் 67-ல் வசிப்பவர்கள், அகரம், எஸ்ஆர்பி கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி உதவிப்பொறியாளர் அலுவலகத்திலும், அமைந்தகரை கோட்டம் 101-ல் வசிப்பவர்கள், அண்ணாநகர் கிழக்கு என் பிளாக் 24-வது தெருவில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சிக்கூடத்திலும் நடக்கும் முகாமில் பங்கேற்கலாம்.

புரசைவாக்கம் கோட்டம் 57-ல் வசிப்பவர்கள், வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெருவில் உள்ள சமூக கூடத்திலும், கிண்டி கோட்டம் 172-ல் வசிப்பவர்கள், கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் இணைப்பு சாலை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம். வேளச்சேரி கோட்டம் 178-ல் வசிப்பவர்கள் தண்டீஸ்வரம் கோயில் குளம் அருகில் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கும் முகாமில் பங்கேற்கலாம்.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x