Published : 28 Jun 2023 04:52 AM
Last Updated : 28 Jun 2023 04:52 AM

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நேர்காணலில் பங்கேற்கும் வசதி - கருவூலம் மற்றும் கணக்குத்துறை அறிவிப்பு

ஓய்வு பெற்ற மாதம், குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் விருப்பமான மாதத்தில் இந்த ஆண்டுக்கான நேர்காணலில் பங்கேற்கலாம்.

சென்னை: ஓய்வுபெற்ற மாதம், குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத ஓய்வூதியர்கள் விரும்பும் காலகட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஓய்வூதியம் தொடர்பான நேர்காணலில் பங்கேற்கலாம் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் தங்களது இருப்பை மெய்ப்பிக்கும் வகையில், கருவூலங்களில் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், நேர்காணலை எளிதாக்கும் வகையில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வூதியர்களுக்கு ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுகிறது. அந்த காலத்தில் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம் அல்லது சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும், சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரட்டை ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வுபெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் இந்த ஆண்டுக்கான நேர்காணலில் பங்கேற்கலாம்.

மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும் www.karuvoolam.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x