Published : 12 Oct 2017 09:32 AM
Last Updated : 12 Oct 2017 09:32 AM

ஊதிய உயர்வை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை 1-1-2016 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ (கிரப்) ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ‘தி இந்து’விடம் அவர் கூறிய தாவது:

மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அலுவலர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று அக்டோபர் 11-ம் தேதி தமிழக அரசு ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பணிக்கொடை ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 2.57 என்ற காரணி அடிப்படையில் மாநில அரசு ஊழியர் களுக் கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், அடிப்படை பணியாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வு தமிழகத்தில் வழங்கப்படவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

மேலும் மத்திய அரசு 1-1-2016 முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு முதலே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இதுதொடர்பாக முதல்வரிடம் விரைவில் கோரிக்கை மனு அளிக்கப்படும்.

இவ்வாறு ஜெ.கணேசன் கூறினார்.

முதல்வருக்கு நேரில் நன்றி

7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் (சி மற்றும் டி பிரிவு) தலைவர் பி.சவுந்தரராஜன் தலைமையில் நிர் வாகிகள் முதல்வர் பழனி சாமியை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x