Last Updated : 09 Jun, 2023 11:04 AM

 

Published : 09 Jun 2023 11:04 AM
Last Updated : 09 Jun 2023 11:04 AM

கடலூரில் 2,000 ஏக்கரில் சாய்ந்த வாழை மரங்கள் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் சுழன்றடித்த சூறாவளி காற்றால் பல்வேறு பகுதியில் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. 2 ஆயிரம் ஏக்கரில் வாழைகள் சாய்ந்துள்ளதால், தங்கள் வாழ் வாதாரத்தை இழந்த விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

கடந்த 5-ம் தேதி மாலை கடலூர்மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளில் திடீர் சூறைக்காற்றுடன் பலத்தமழை பெய்தது. இதில் கடலூர், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், ஓதியடிகுப்பம் அரசடிகுப்பம், மாவடிபாளையம், ராமாபுரம்,சாத்தங்குப்பம், வழிசோதனை பாளையம், அன்னவல்லி, வழுதலப்பட்டு, குறிஞ்சிப்பாடி வட்டத்தில்புலியூர் காட்டுச் சாகை, கோரா ணப்பட்டு, மதனகோபலபுரம், கட்டியம்குப்பம்,

விருத்தாசலம் வட்டம் சின்னவாடவாடி எ.வடக்குப்பம், தொட்டிகுப்பம், ராசா பாளையம் விஜயமாநகரம், எருமனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங் கள் சாய்ந்து முறிந்து விழுந்தன.

நல்ல விளைச்சலை எதிர்பார்த் திருந்த நிலையில் அடித்த இந்த சூறைக்காற்று இப்பகுதி விவசாயிகளை நிலை குலையச் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கன்றுகள் நடப்பட்டு, தற்போது மரமாக வளர்ந்து, குலை தள்ளியுள்ள நிலையில் மற்றும் சில இடங்களில் குலை தள்ளும் பருவத்தில் இருந்த நிலையில் இந்த பெரும் சேதத்தை கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.

“கடன் வாங்கி ஒரு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்து, வாழை மரத்தை குழந்தை போல வளர்த்து வந்தோம். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்துநல்ல விலைக்கு விற்கலாம் என்றுஎண்ணியிருந்த நேரத்தில் இந்தபெருங்காற்று அடித்து, எங்கள் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது” என்று வேதனையுடன் கூறுகிறார் வழிசோதனைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை வயல்களை பார்வையிட்டுள்ளனர். “சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 2 ஆயிரத்து 370 ஏக்கர் ( 948 ஹெக்டேர் ) வாழைகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர் களை தோட்டக்கலை துறை அதிகா ரிகள், வருவாய் துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்த பாதிப்பு விவரம்குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து கடலூர் தோட்டக் கலை துணை இயக்குநர் (பொறுப்பு) அருண் தலைமையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று கணக்கெடுக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பாதிப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டசெயலாளர் சரவணன் கூறுகையில், ‘‘கரோனா காலத்தில் கடும்பாதிப்பை எதிர்கொண்டு, தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வந் தோம். அதற்குள் இந்த சூறைக் காற்றுபெருத்த சேதத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. அரசு பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கணக் கெடுப்பு நடத்தி முழு நிவாரணம் வழங்கிட வேண்டும். அடுத்த சாகுபடிக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகளை இலவசமாக தந்து, எங்கள்வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x