Published : 05 Oct 2017 11:43 AM
Last Updated : 05 Oct 2017 11:43 AM

சேலத்தில் கனமழை: குமரகிரி ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளில் நீர் புகுந்தது

சேலத்தில் பெய்த கனமழையால் அம்மாபேட்டை அருகிலுள்ள குமரகிரி ஏரி நிரம்பியதால் அருகிலுள்ள குடியிருப்புகளில் நீர் புகுந்தது.

சேலம் அம்மாபேட்டை அருகில் உள்ளது குமரகிரி ஏரி. இப்பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு பெய்த கனமழையால், அருகில் உள்ள பச்சபட்டி பகுதியின் சாலைகளில் நீர் புகுந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் அங்குள்ள 500 குடியிருப்புகளில் சுமார் 200 வீடுகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் அதிகரித்த மழை நீரால், வீட்டுக்குள் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததுள்ளன. சம்பவத்தை அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை. இதனால் பொதுமக்களும், தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் நீர் புகுந்தவர்களின் குடும்பங்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அங்கிருந்த கால்நடைகளும் பாதிக்கப்பட்டன. மழை நீரில் மாட்டிய கன்றுக்குட்டி ஒன்று நீரில் மூழ்கித் தத்தளித்ததைக் காண முடிந்தது.

சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: எஸ்.குருபிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x