10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்

மாலதி ஹெலன்

மாலதி ஹெலன்

Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைச்செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவின் விவரம்: தமிழக ஆளுநரின் செயலராக உள்ள ஆர்.கிர்லோஷ்குமார் இப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலராகவும், சமூகநலத் துறை கூடுதல் இயக்குநர் சரண்யா அரி இப்போது பெரம்பலூர் ஆட்சியராகவும், அப்பதவியில் இருந்த என்.மிருநாளினி இப்போது அரியலூர் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் இப்போது சென்னை மாவட்ட ஆட்சியராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் இப்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவின் இணை மேலாண் இயக்குநர் எஸ்.கவிதா இப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இப்போது சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத்துறை மரபுப்பிரிவு துணை செயலர் வீர் பிரதாப் சிங் இப்போது திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், சென்னை வடக்கு மண்டல துணை ஆணையராக இருந்த கட்டா ரவி தேஜா இப்போது கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>மாலதி ஹெலன்</p></div>
சுவாமிமலைக்கு நிரந்தர அஞ்சல் முத்திரை அறிமுகம் - சிறப்பு அம்சம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in