ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.10 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக திரண்டிருந்த கேரள வியாபாரிகள்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக திரண்டிருந்த கேரள வியாபாரிகள்.

Updated on
1 min read

பழநி: கேரளா​வில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்​படு​வதை முன்​னிட்​டு, ஒட்​டன்​சத்​திரம் மார்க்​கெட்​டில் கடந்த 3 நாட்​களில் ரூ.10 கோடிக்கு காய்​கறிகள் விற்​பனை​யான​தால் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

ஒட்​டன்​சத்​திரம் காய்​கறி மார்க்​கெட் தமிழகத்​தின் மிகப் பெரிய மார்க்​கெட்​களில் ஒன்​று. இங்​கிருந்து தின​மும் பிற மாவட்​டங்​கள் மற்றும் மாநிலங்களுக்கு காய்​கறிகள் அனுப்​பப்படு​கின்றன. குறிப்​பாக, 50 சதவீத காய்​கறிகள் கேரளா​வுக்குச் செல்கின்​றன. 100-க்​கும் மேற்​பட்ட லாரி​கள், சரக்கு வாக​னங்​களில் சராசரி​யாக 100 டன் காய்​கறிகள் வரை விற்​பனை​யாகிறது.

கேரளா​வில் முக்​கிய பண்​டிகை​யான ஓணம் நாளை (ஆக. 26) கொண்​டாடப்​படு​கிறது. இதற்​காக, கேரள வியா​பாரி​கள் ஒட்​டன்​சத்​திரம் மார்க்​கெட்​டில் இருந்து ஏராள​மான லாரி​களில் காய்​கறிகளை வாங்​கிச் சென்​றனர். இதனால் கடந்த 3 நாட்​களாக ஒட்​டன்​சத்​திரம் மார்க்​கெட்​டில் காய்​கறி வியா​பாரம் களை​கட்​டியது.

கேரள மக்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் பயறு வகைகள், பூசணிக்​காய், வெங்​கா​யம் உள்​ளிட்ட காய்​கறிகளின் விலை​யும் அதி​கரித்​துள்​ளது. நேற்று மட்​டும் ரூ.2.5 கோடிக்கு காய்​கறிகள் விற்​பனை​யானது. கடந்த 3 நாட்​களில் மொத்​தம் ரூ.10 கோடிக்கு காய்​கறிகள் விற்​பனை​யான​தால் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இதுகுறித்து மார்க்​கெட் வியா​பாரி​கள் கூறியதாவது: அண்​மைக்கால​மாக கேரளா​வுக்கு ஒட்​டன்​சத்​திரம் மட்​டுமின்றி பிற மாவட்​டங்​கள், வெளி மாநிலங்​களில் இருந்​தும் காய்​கறிகள் விற்​பனைக்கு அனுப்​பப்​படு​கின்​றன. இதன் காரண​மாக கேரள வியா​பாரி​கள் ஒட்​டன்​சத்​திரத்​தில் கொள்​முதல் செய்​யும் அளவு ஆண்​டு​தோறும் குறைந்து வரு​கிறது.

அதே​நேரம், எல்​-நினோ பாதிப்பு காரண​மாக நடப்​பாண்​டில் பல மாவட்​டங்​களில் காய்​கறி சாகுபடி பாதிப்​படைந்​துள்​ளது. அதனால், இந்த ஆண்டு ஒட்​டன்​சத்​திரம் மார்க்​கெட்​டில் இருந்து 70 சதவீதம் காய்​கறிகள் கேரளா​வுக்கு விற்​பனைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. இதன் காரண​மாக, கடந்த ஆண்​டை​விட அதிக லாபம் கிடைத்​துள்​ளது. இவ்வாறு கூறினர்.

<div class="paragraphs"><p>ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக திரண்டிருந்த கேரள வியாபாரிகள்.</p></div>
“இவிஎம் இயந்திரங்களை யாரும் ஹேக் செய்ய முடியாது” - தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in