

பழநி: மதுபானக் கடைகளில் கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் நிறுத்தப்படும் என அமைச்சர் க.விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் என்னை திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்துள்ளார். முறைகேடுகளுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் பேரவை கூட்டத் தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும். எம்ஆர்பி விலைக்குள் மதுபானம் கொண்டு வரப்படும். எந்த ஒரு தனி நபருக்கும் நுகர்வோரின் பணம் போய் சேரக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.