Published : 10 Sep 2019 11:08 am

Updated : 10 Sep 2019 11:34 am

 

Published : 10 Sep 2019 11:08 AM
Last Updated : 10 Sep 2019 11:34 AM

அந்த நாள் 48: முகலாய ஆட்சியும் ஐரோப்பியர் வருகையும்

mughal-rule

ஆதி வள்ளியப்பன்

பொ.ஆ. 15-ம் நூற்றாண்டில் சீக்கிய மதகுரு குருநானக் பிறந்தது முதல் 18-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் மராத்தியர்களின் வீழ்ச்சிவரை இந்திய அளவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த காலவரிசை:
பொது ஆண்டு (பொ.ஆ.-கி.பி.)

1451-1489: டெல்லி சுல்தான் ஆட்சியை வீழ்த்திய பஹ்லுல் கான் லோடி, லோடி வம்சத்தை நிறுவினார்
1469 - 1539: முதல் சீக்கிய குரு, குருநானக்கின் காலம்
1490: குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார்
1498: ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வாஸ்கோடகாமா புதிய கடல்வழியைக் கண்டார்
1503: கொச்சி ஆட்சியை போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள். நவீனகால இந்தியாவில் ஐரோப்பிய நாடு ஒன்று பெற்ற முதல் வெற்றி இது
1509: டையுவில் நடைபெற்ற போர், ஆசியக் கடற்கரை சார்ந்த நகரங்களில் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தைத் தொடங்கிவைத்தது
1526: டெல்லி சுல்தான்களில் ஒருவரான இப்ராஹிம் லோடியின் ஆட்சிமுறையால் கோபமடைந்த உள்ளூர் செல்வந்தர்கள், டெல்லி - ஆக்ராவுக்குப் படையெடுத்து வருமாறு ஆப்கானிய அரசர் பாபரை அழைத்தார்கள். முதலாம் பானிபட் போரில் லோடியை வீழ்த்தி முகலாயப் பேரரசை பாபர் நிறுவினார்
1527: மேவார் பகுதியை பாபர் வென்றார்
1530: 'பாபர்நாமா' என்ற புத்தகத்தை பாபர் எழுதினார். அவர் இறந்த பிறகு, அவருடைய மகன் ஹுமாயுன் ஆட்சிப் பொறுப்பேற்றார்
1540: கன்னௌஜில் நடைபெற்ற போரில் ஆப்கனைச் சேர்ந்த ஷெர் ஷா சுர்ரால் (சூரி) ஹுமாயுன் வீழ்த்தப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார்
1555: ஷெர்ஷா சூரியை வீழ்த்தி ஹுமாயுன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். அடுத்த ஆண்டே அவர் இறக்க, அவருடைய மகன் அக்பர் அரசர் ஆனார்
1556-1605: முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக் காலம்
1556: இரண்டாம் பானிபட் போரில், ஹேமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்யனை அக்பர் வீழ்த்தினார்
1562: ஜோதாபாயை அக்பர் மணந்தார்
1564: ஜிஸ்யா (இஸ்லாத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுவதற்குச் செலுத்த வேண்டிய வரி) வரியை அக்பர் நீக்கினார்
1571: ஃபதேபூர் சிக்ரி நகரை அக்பர் கட்டத் தொடங்கினார்
1572: குஜராத், வங்கம் (1574), காஷ்மீர் (1586) பகுதிகளை அக்பர் வென்றார்
1600: பிரிட்டனில் கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது
1605-1627: ஜஹாங்கிர், நூர்ஜஹானின் ஆட்சிக் காலம்
1612: இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்குவதற்கான அனுமதியை ஆங்கிலேயத் தூதர் சர் தாமஸ் ரோ பெற்றதையடுத்து, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்கியது
1628-1657: ஷாஜஹானின் ஆட்சிக் காலம்
1648: ஷாஜஹானாபாத் (பழைய டெல்லி) நகர் கட்டத் தொடங்கப்பட்டது
1658: தாஜ்மகால், ஜும்மா மசூதி, செங்கோட்டை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஷாஜஹான் நிறைவுசெய்தார்
1658 - 1707: ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலம்
1630 - 1680: மராத்திய மன்னர் சிவாஜியின் ஆட்சிக் காலம்
1674: ஔரங்கசீப்பின் படைகளை வீழ்த்திய சத்ரபதி சிவாஜி மராத்திய ஆட்சியை நிறுவினார்
1675: ஔரங்கசீப்பின் ஆணைக்கு இணங்க சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான குரு தேக் பஹதுர் தூக்கிலிடப்பட்டார்
1679: ஜிஸ்யா வரி மீண்டும் கொண்டுவரப்பட்டது
1681: தக்காணப் பகுதி மீது ஔரங்கசீப் படையெடுத்தார்
1699: சீக்கியர்களின் 10-ம் மத குருவான குரு கோவிந்த் சிங், 'தள் கால்சா' என்ற ராணுவப் படையை நிறுவினார்
1707 - 1712: ஔரங்கசீப் இறந்த பிறகு, முகலாய ஆட்சி ஆட்டம் கண்டது. அவருடைய மகன் முதலாம் பகதூர் ஷா ஆட்சிக்கு வந்தார்
1708: மகாராஷ்டிரத்தில் குரு கோவிந்த் சிங்கைக் கொல்வதற்கு முயற்சி நடைபெற்றது
1719: ஐந்தாம் மராத்தியப் பேரரசர் சாஹு, முதலாம் பாஜிராவை பேஷ்வாவாக (பிரதமர் பதவிக்கு இணையானது) நியமித்தார்
1735: பேஷ்வா முதலாம் பாஜிராவ் ராஜபுதனத்தை (இன்றைய ராஜஸ்தான்) இணைத்துக்கொண்டார்
1737: டெல்லியையும் முதலாம் பாஜிராவ் கைப்பற்றினார். முகலாயப் பேரரசர் கொல்லப்படாமல், அடையாளத் தலைவராக்கப்பட்டார்
1739: பாரசீகத்தை (இன்றைய ஈரான்) சேர்ந்த நாதிர் ஷா டெல்லியைக் கொள்ளையடித்தார்
1740: பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் வெற்றிபெற்ற பெருமையைக் கொண்ட முதலாம் பாஜிராவ் இறந்தார். பாலாஜி பாஜிராவ் ஆட்சிக்கு வந்தார்
1760: ஹைதராபாத் நிஸாமை மராத்தியர்கள் வீழ்த்தினார்கள். வட இந்தியாவின் பெரும்பகுதியை மராத்தியர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்
1761: மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை ஆப்கனைச் சேர்ந்த அகமதுஷா அப்தலி வீழ்த்தினார். மராத்தியர்களின் ஆட்சி வீழ்ந்தது
1766: அகமதுஷா அப்தலியைச் சீக்கியர்கள் வீழ்த்தினார்கள். பஞ்சாப்பில் சீக்கிய ஆட்சி நிறுவப்பட்டது

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி,
பள்ளி வரலாற்றுப் பாடம்

(அடுத்த வாரம் நிறைவடையும்)
கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in


அந்த நாள்முகலாய ஆட்சிஐரோப்பியர்டெல்லிசுல்தான் ஆட்சிபோட்டித் தேர்வுகள்தாஜ்மகால்ஜும்மா மசூதிசெங்கோட்டைமன்னர் சிவாஜிமராத்திய மன்னர்ஜோதாபாயை அக்பர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author