Gen Z ஏன் பௌதிகச் சொத்துகளை விரும்புவதில்லை? | சொத்து

Gen Z ஏன் பௌதிகச் சொத்துகளை விரும்புவதில்லை? | சொத்து
Updated on: 
2 min read

முந்தைய தலைமுறையினரின் (Gen-X) முதலீட்டு உலகம் எளிமை யான விதியைக் கொண்டிருந்தது. ‘சம்பாதிக்கும் பணத்தில் ஒரு துண்டு நிலத்தை வாங்கிப் போடு, வீட்டைக் கட்டு, நகையைச் சேர்த்து வை... அதுதான் காலத்துக்கும் உதவும்’ என்பதே அவர்களின் தாரக மந்திரம்.

ஆனால், இன்றைய ‘ஜென் ஸீ' தலைமுறையினரின் வாழும் முறையும் சிந்தனைப் போக்கும் பெரிதும் வேறுபட்டவை. இவர்களில் பலரும் ‘பௌதிகச் சொத்துகளை' விரும்புவதில்லை. அவை உதவியாக இருப்பதைவிட, பல நேரம் நிதிச் சுமையாகவும் கால்களைக் கட்டும் சங்கிலியாகவுமே மாறுவதாக நினைக் கின்றனர். ஏன் ஜென் ஸீக்கு இது பொருந்தவில்லை?

நகரும் வாழ்க்கை முறை

முந்தைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தாங்கள் பிறந்த ஊரிலோ அல்லது வேலைக்குச் சேர்ந்த நகரத்திலோ 30-40 ஆண்டுகள் நிலையாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய ஜென் ஸீக்களில் பலர் மாநிலம், நாடு தாண்டித் தங்களின் வேலை, தொழில் வாய்ப்புகளுக்காக இடம்பெயர்கின்றனர்.

நாளை எந்த இடத்தில் வாழ்வோம் என்பதே தெரி யாத சூழலில், பெரிய தொகையைக் கொட்டி நிலத்தையோ வீட்டையோ வாங்கிப் போடுவது அவர்களின் இடப் பெயர்ச்சிக்குத் தடையாக மாறுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in