அணிலாடும் முன்றில் | பேரு வாங்கின ஊரு 02

அணிலாடும் முன்றில் | பேரு வாங்கின ஊரு 02
Updated on
3 min read

யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு தொடங்கி பல பெரிய விலங்குகள் வாழும் ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதி அது. ஆனால், 2 கிலோ எடையுள்ள ஓர் அணில் வகைக்குதான் அங்கே முதல் மரியாதை அளித்திருக்கின்றன அரசும் வனத்துறையும்.

விருதுநகருக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஊரும் காடும் இணைந்த ‘செண்பகத்தோப்பு’தான் அந்தக் காட்டுக் குடியிருப்பு. இங்கே உள்ள செண்பகத்தோப்பு அருவி, காட்டுக்குள் 247 படிகளுடன் கட்டப்பட்டுள்ள பழமையான காட்டழகர் கோயில், நாட்டார் வழிபாட்டுக்குப் புகழ்பெற்ற வனப்பேச்சியம்மன் கோயில் ஆகியன இந்த மாவட்ட மக்களுக்குச் சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன.

காட்டுயிர் சரணாலயம் என்பதால் காட்டுக்குள் ஓர் எல்லைக்கு மேல் செல்ல முடியாதபடி அகழி வெட்டி விலங்குகளைச் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பாதுகாத்திருக்கிறது வனத்துறை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து 11 கி.மீ. பயணம் செய்தால் வந்துவிடுகிறது செண்பகத் தோப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு களிலும் அதன் அடிவாரத்திலும் உள்ள காப்புக்காடுகளை உள்ளடக்கி, 480 ச.கி.மீ. பரப்பளவில் 1989இல் அமைக் கப்பட்ட வனவிலங்கு சரணாலயம்தான் இந்தச் செண்பகத்தோப்பு.

பளியர் பழங்குடிகள்

செண்பகத்தோப்பு மலைக்காட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பளியர் பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு மலையின் அடிவாரத்தில் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, குடியேற்றியிருக்கிறது அரசு.

மனித - விலங்கு எதிர்கொள்ளல் தவிர்க்கப்படவும் சரணாலயம் மேம் படுத்தப்படவும் பழங்குடிகள் இந்த இடப்பெயர்வை ஏற்றுக்கொண்டு சமவெளிக்கு வந்துவிட்டனர். ஆனால், செண்பகத்தோப்பு உடனான தங்கள் பூர்விகப் பந்தத்தை அவர்கள் விலக்கிக்கொள்ளவே இல்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in