சொரட்டையன் எனும் உலோபி! | நதி நகர்ந்த பாதை 3

சொரட்டையன் எனும் உலோபி! | நதி நகர்ந்த பாதை 3
Updated on: 
2 min read

சொரட்டையன் தாத்தா பற்றி அவர் பெண்டாட்டி மாரியம்மா பாட்டி ஒரு மதியப் பொழுதில் புராணத்தைப் பாடினார். சொரட்டையனுக்கு ஊர்ல கடுங்கஞ்சன் என்று பேர். வெறும் கஞ்சன் என்று சொன்னால் வீரியம் குறைவு என்பதால் கடுங்கஞ்சன் என்று ஊர் சொன்னது.

சின்ன வயசிலேயே அப்பனாத்தாளை காலராவில் சாகக்கொடுத்து விட்டு, காட்டுச் செடி மாதிரி வளர்ந்த மனுசன் சொரட்டையன். மலைக்கரட்டுக்குத் தினமும் போய், விறகு பொறுக்கி வந்து கடைகளுக்குப் போட்டு வாழத் தொடங்கி கூலி வேலை, உழவு வேலை, கிணறு வெட்டு என்று எல்லா வேலை களையும் பார்த்து, உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த சீவன்.

பொன்னப்பனுக்கு ஆறு பெண் பிள்ளைகள். ஆட்டுப்பட்டி வைத்திருந்தார். யாராவது அவரிடம் அவரது பொழைப்பு பற்றிக் கேட்டால், ’எம்பது ஆட்டுக்குட்டியும் ஆறு பொட்டைக்குட்டியும் கிடக்கு’ என்பார். தூரத்துச் சொந்தமான சொரட்டையனைப் பார்த்ததுமே மகிழ்ந்துபோய் பதினைந்து ஆடுகளையும், கூடவே பெண்ணையும் கொடுத்துவிட்டார். கோயிலில் மாலை மாற்றி கல்யாணம் முடிந்தது.

மூணு படி பச்சரிசியில் மண்டவெல்லத்தை நொறுக்கிப் போட்டு , பொங்கச்சோறு கிண்டி, தேக்கு இலையில் வைத்து எல்லாருக்கும் கொடுத்தார்கள். அதுதான் கல்யாண விருந்து. பொஞ்சாதி மாரியம்மாவுக்குச் சீதனமாக வந்த பதினைந்து ஆடுகளைக் கண்ணும் கருத்துமாகப் பெருக்கி பெரிய மந்தையாக ஆக்கினார் சொரட்டையன்.

ஒரே ஒரு வேட்டியும் சட்டையும். திருவிழா, தீவாளி, பொங்கலுக்கு மட்டும் அதை உடுத்துவார். பொண்டாட்டிக்கு ரெண்டே சேலை. ஓர் ஓட்டு வீடு. அத்தனை ஆடு இருந்தாலும்கூட வீட்டில் மணமாகப் பால் காய்ச்சிக் குடிக்க மாட்டார்கள். ரெண்டு பேருக்கும் பிள்ளை பாக்கியம் ஏனோ இல்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in