“முடிஞ்சா புடிய்யா!” | நதி நகர்ந்த பாதை 2

“முடிஞ்சா புடிய்யா!” | நதி நகர்ந்த பாதை 2
Updated on: 
2 min read

பள்ளியில் படிக்கையில் லீவு விட்டால் போதும். ஏழெட்டுப் பசங்கள் ஒன்றுசேர்ந்து கிழக்குமுகமாகப் புறப்பட்டுவிடுவோம். இரண்டு கரடுகள் ஏறி இறங்கினால், வருவது வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி. அந்த நீர்ப்பரப்பைப் பார்த்துவருவதில் மகிழ்ச்சி.

வெயில் காலத்தில் அணையின் நீர்மட்டம் குறையும். அந்த நேரத்தில் அதுவரை நீரில் மூழ்கி இருக்கும் நிலம் வெளியே தெரிய, அந்தப் பகுதி மக்கள் அதில் பயிர்களை விளைவிப்பார்கள்.

செழிப்பான அந்த மண்ணில் மொச்சை, அவரை, துவரை என்று எந்தப் பயிர்ப் பச்சையைப் போட்டாலும், பசபசவென்று குமரிப்பிள்ளை போல வளர்ந்து நிற்கும். மழைக்காலத்தில் அணை நீர்மட்டம் உயர்ந்தால், பழையபடி நீர் மேலேறி அந்த நிலத்தை மூழ்கடிக்கும். இது அந்தப் பகுதி மக்களின் வாழ்வில் ஆண்டுதோறும் நடக்கும் ஒரு கண்ணாமூச்சி விவசாயம்.

போகும்போதெல்லாம் அங்கிருக்கும் ஒரு பெட்டிக் கடையில் சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தின்று, சாக்ரீன் சர்பத் குடிப்போம். அந்தப் பெட்டிக்கடை தாத்தாதான் எங்களுக்கு கந்தனின் கதையைச் சொன்னார்.

“அந்த ஏரியாவுக்கே சாராயம் காய்ச்சி சப்ளை செய்கிற ஆள்தான் கந்தன். கருவேலங்காட்டில் ஒத்தை ஆளாவே சாராயம் காய்ச்சுவான். சரக்கு தேவாமிர்தமாக இருக்கும். எனக்கு ஓசியா குடுப்பான். பதிலுக்கு நான் துப்புச் சொல்லணும்.”

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in