ஒரு கோப்பைத் தேநீரின் உள்ளே...

ஒரு கோப்பைத் தேநீரின் உள்ளே...
Updated on: 
2 min read

‘மலைகளின் ராணி’ என நீலகிரி மாவட்டத்தைப் பெருமைப்படுத்துவது மேற்குத் தொடர்ச்சி மலை. அதன் சரிவுகளில், குளிர் மேகங்கள் உரசிச் செல்லும் பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களின் அமைதியில் உறைந்திருக்கிறது குன்னூர்.

நாம் பருகும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரின் ஆவி பறக்கும் சுவைக்குப் பின்னால், ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வியர்வைத் துளிகளும், தேயிலை ஏலத்துக்கு என்றே பெயர் பெற்ற இந்த ஊரின் வணிகமும் மறைந்திருக்கின்றன. 1866ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் அரசால் ஒரு மலையக நகராட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஊர் இது.

ஊட்டியை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்குக் குன்னூர்தான் நுழைவாயில். இங்கே 127 ஆண்டு மரபுடன், அதே பழமை மாறாத தோற்றத்துடன் பராமரிக்கப்படும் ரயில் நிலையத்துடன் கூடிய நீலகிரி மலை ரயிலும் அங்குள்ள சிம்ஸ் பூங்காவும் சட்டென்று அவர்களைக் கவர்ந்துவிடும். ஆனால், இங்கு விளையும் தேயிலையின் கதை அவர்களுக்குத் தெரியாது.

உலகளாவிய தேயிலைச் சந்தையில் குன்னூருக்கு இருக்கும் அடையாளம் 100 ஆண்டுகள் மரபைக் கடந்த ஒன்று. தென்னிந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வாடிக்கையாளர்களைக் கொண்ட மிக முக்கியமான 'தேயிலை ஏல மையம்' (Coonoor Tea Auction Centre) இயங்கும் ஊர் இது.

இந்தியத் தேயிலை வாரியத்தின் (Tea Board of India) வழிகாட்டுதலில், வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இலை (Leaf), தூள் (Dust) வடிவத் தேயிலை ரகங்கள் இங்கு ஏலம் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் குன்னூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் மிகக் குறைவாகவே விளைச்சல் கிடைக்கும் ‘நுனிப் பசுந்தேயிலை’ ஒரு கிலோ ரூபாய் 15 ஆயிரம்வரை சர்வதேசத் தேயிலை வணிகர்களால் போட்டி போட்டு ஏலம் எடுக்கப்படுகிறது. சந்தை நிலவரம், காலநிலை, தேயிலையின் தரத்துக்கு ஏற்ப வாராந்திர விலையில் ஏற்றஇறக்கங்கள் காணப்படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in