

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது எல்லிஸ் சாலை. அண்ணா சாலை - வாலாஜா சாலையை இணைக்கும் முக்கியச் சாலை இது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். காரணம், குறுகிய சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகளும் உணவகங்களும் இயங்கி வருகின்றன.
எல்லிஸ் சாலையில் வாகனங்களுக்கு நடுவே நடப்பது லேசுபட்ட காரியமல்ல. இங்கே நாள்தோறும் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் சைக்கிளில் ஒருவர் தேநீர் எடுத்துச்செல்லும் காட்சியைப் பார்க்கலாம்.