

இருபாகம் ஜமீன்தார் வீடு, ஒரு பாகம் ஜமீன்தார் வீடு என்று ஒரே தெருவில் சற்றே எதிரெதிரே இரண்டு வீடுகள். ஒருவருக்குக் கிராமத்தில் மூன்றில் இரண்டு பாகங்கள் சொந்தம். இன்னொருவருக்கு மூன்றில் ஒரு பாகம் சொந்தம். இரண்டு பேருக்கும் கிராமமே சொந்தம்.
இரண்டு பேரின் வீடுகளும் ஒன்றுக்கு மற்றொன்று போட்டி போட்டுக் கொண்டு இரண்டு மாடிகளுடனும் மூன்று மாடிகளுடனும் கம்பீரமாக எழுந்து நிற்கும். மூன்று மாடி வீட்டை எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்துப் போவார்கள்.