ரூ.4,000 கோடிக்கு 2 ஐபிஓ இன்று வெளியாகிறது

ரூ.4,000 கோடிக்கு 2 ஐபிஓ இன்று வெளியாகிறது
Updated on
1 min read

ஃபிராக்டல் அனலிட்டிக்ஸ்: இந்தியாவில் ஏஐ பிரிவில் பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனமாக உருவெடுக்க ஃபிராக்டல் அனலிட்டிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் ரூ.2,833.90 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை (ஐபிஓ) வெளியிடவுள்ளது. ஒரு பங்கின் விலையை ரூ.857 முதல் ரூ.900-ஆக நிர்ணயித்துள்ளது. கோடக் மஹிந்திரா கேபிடல் இந்த பங்கு வெளியீட்டை நிர்வாகிக்கிறது.

ஆயே பைனான்ஸ்: சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனமான ஆயே பைனான்ஸ், ஐபிஓ மூலம் ரூ.1,010 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.710 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.300 கோடி மதிப்பிலான ஓஎப்எஸ் பங்குகளும் அடங்கும். ஒரு பங்கின் விலை ரூ.122 முதல்

ரூ.129 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் கேபிடல் இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் ஐபிஓ இன்று தொடங்குகிறது. பிப். 11 வரை விண்ணப்பிக்கலாம். பிப். 12-ல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிப்.16-ல் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

10 முக்கிய நாடுகளின் ஜிடிபி - கடன் விகிதம்: வளர்ந்த நாடாக இருந்தாலும் வளரும் நாடாக இருந்தாலும் பல்வேறு வகைகளில் கடன் வாங்குகின்றன. கடன் பெறுவதற்கு ஒவ்வொரு நாடும் ஒரு அளவுகோல் வைத்துள்ளது.

அதாவது தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவ்வளவு சதவீதம் கடன் வாங்கலாம் என ஒரு கணக்கு உள்ளது. உதாரணமாக இந்தியா ஜிடிபி மதிப்பில் 81% கடன் பெற்றுள்ளது. அந்த வகையில் ஜிடிபி - கடன் விகிதம் அதிகமாக உள்ள முக்கியமான 10 நாடுகளை பார்க்கலாம்.

ரூ.4,000 கோடிக்கு 2 ஐபிஓ இன்று வெளியாகிறது
நிமிர்ந்து நின்ற மனித இனம்! - இடுப்பு எலும்பின் மாற்றங்களில் நிகழ்ந்த புரட்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in