வேகமெடுக்கும் விரைவு வணிகம்

வேகமெடுக்கும் விரைவு வணிகம்
Updated on
2 min read

‘கு​யிக் காமர்​ஸ்’ என அழைக்​கப்​படும் விரைவு வணி​கம் டாப் கியரில் பயணிக்க ஆரம்​பித்​திருக்​கிறது. இன்​றைக்கு இணை​ய​வழி​யில் (ஆன்​லைன்) விற்​பனை செய்​யப்​படும் அன்​றாடத் தேவைக்​கான நுகர்​வோர் பொருள்​களில் (FMCG) சுமார் 75% வரை விரைவு வணி​கம் மூலம் நடை​பெறு​வ​தாக டாபர், டாடா கன்​ஸ்​யூமர் ப்ராடக்ட்​ஸ், ஐடிசி, பார்லே போன்ற நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​கள் கூறி​யிருக்​கின்​றனர்.

இந்த விரைவு வணி​கம் நுகர்​வோரின் பழக்க வழக்​கங்​களி​லும், சில்​லறை வணி​கம் சார்ந்த மற்ற சானல்​களின் பங்​களிப்​பிலும் பெரும் மாற்​றத்தை ஏற்​படுத்தி வரு​கிறது. விரைவு வணி​கத் தளத்​தில் நுகர்​வோரின் தேவைக்​கேற்ப பெரு​வாரி​யான பொருள்​கள் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. ஆர்​டர் செய்த 10-15 நிமிடங்​களில் பொருள்​கள் டெலிவரி செய்​யப்​படு​கின்​றன. இன்​றைக்கு அன்​றாடத் தேவைக்​கான பொருள்​களை​யும் தாண்டி நீடித்து உழைக்​கும் பொருள்​களான போன், கெட்​டில்​கள், மிக்​ஸர்​-கிரைண்​டர் போன்​றவை​யும் ஆர்​டர் செய்த 30 நிமிடங்​களுக்​குள் வீடு தேடி வரு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in