

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறும் பயணத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உள்நாட்டு தொழில் துறை உற்பத்தித் திறன் சவால்கள் குறித்து பேசுகையில், இந்தியாவில் செம்பு ஆலைகள் மூடப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தூத்துக்குடியில் அமைந்திருந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதன் மூலம், இந்தியாவின் செம்பு வர்த்தக நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
ஒருகாலத்தில் செம்பை ஏற்றுமதி செய்த இந்தியா, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதையடுத்து செம்பை இறக்குமதி செய்யும் நாடாக மாறியது. சமீபத்தில், 2023-24 நிதியாண்டில், இந்தியா சுமார் 3.63 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட செம்பு கேத்தோடை ரூ.24,552 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது.