Published : 23 Mar 2015 10:39 AM
Last Updated : 23 Mar 2015 10:39 AM

புத்தக அலமாரி- 23.03.2015

Title: 30 Minutes to Boost Your Self-Esteem

Author: Patricia Cleghorn

Publisher: Kogan Page

அனைத்து விதமான வெற்றிக்கும் அடிப்படை சுயமரியாதையே. சுய மரியாதையை அதிகரித்துக்கொள்ளத் தேவையான குறிப்புகளையும் அறிவுரைகளையும் வழங்குகின்றது இந்தப் புத்தகம். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் புதிய சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும், வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டுசெல்லவும், கடினமான சூழ்நிலைகளை சாமாளிப்பதற்குமான கருத்துகளையும் கொண்டுள்ளது.

Title: How to Win with High Self-Esteem

Author: Mack R Douglas

Publisher: Magna Publishing

ஒருவரது தனிப்பட்ட திறனுக்கான ஆதாரமாக விளங்குவது சுய மரியாதையே என்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர், இதுவே, நமது திறனைத் தூண்டி, ஊக்குவித்து வெற்றிகரமான வாழ்க்கைக்கான பாதையில் செல்லத் தயார்படுத்துகின்றது.

மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர்வான சுய மரியாதையின் மூலம் எவ்வாறு வெற்றியடைவதைப் பற்றியும், வேலை மற்றும் அடுத்தவர்களுடனான உறவுமுறை போன்றவற்றின் மூலம் எவ்வாறு சுய மரியாதையினை அதிகரித்துக் கொள்வதைப்பற்றியும் சொல்கின்றது.

Title: Building Self-Esteem

Author: William Stewart

Publisher: Jaico Publishing House

சுய மரியாதையின் குறைபாடு மற்றும் அதன் விளைவுகளானது கிட்டத்தட்ட வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. சுய மரியாதையை உயர்த்திக்கொள்வதற்கான உத்திகள், இலக்கினை நிர்ணயித்து, அதன் மூலம் வெற்றியை நோக்கிய செயல்பாட்டிற்கு உதவும் வகையிலான அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும், சுய மரியாதையின் வரையறை, உறவுமுறை மற்றும் மன அழுத்தம் பற்றியும் தெளிவான புரிதலை ஏற்படுத்துகின்றது.

Title: The Power of Self-Esteem

Author: Nathaniel Branden

Publisher: Westland Books

நமது வாழ்க்கைக்கான வடிவத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான தருணங்களில் சுய மரியாதையானது சக்தி வாய்ந்த பங்கினை அளிக்கின்றது. அப்படிப்பட்ட சுயமரியாதையின் ஆற்றலைப்பற்றி பேசுகின்றது இந்த புத்தகம். சுயமரியாதை என்றால் என்ன?

மற்றும் நமக்கு ஏன் சுயமரியாதை தேவைப்படுகின்றது போன்ற அடிப்படை காரணிகளையும் அதன்மூலம் ஏற்படும் வெற்றிகளைப்பற்றியும் விளக்குகின்றது. பணியிடத்தில் சுய மரியாதையின் ஆற்றல் ஆகியவற்றைப்பற்றிய விளக்கங்களையும் சொல்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x