

உலகத்தில் உள்ள அனைவரின் பசியைப் போக்கும் மேன்மையான இடத்தில் வேளாண் தொழில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என பல்வேறு நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் வேளாண் தொழிலிலும் புகுத்தப்பட்டு வருகின்றன.
உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் வேளாண் துறையில் தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில், இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. புதிதாக வேளாண் சார் தொழில் தொடங்கும் இளம் தொழில்முனைவோருக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகம் (இன்குபேஷன்) வழிகாட்டி வருகிறது.