சிப் உலகம்

சிப் உலகம்
Updated on
1 min read

தற்போதைய டிஜிட்டல் உலகில் செமி கண்டக்டர் என்றழைக்கப்படும் சிப் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கார் முதல் ஸ்மார்ட்போன் வரை சிப்தான் மூளையாக உள்ளது. இது வரையில் வெளிநாடுகளிலிருந்தே சிப்பை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது அவற்றை உள்நாட்டில் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கள்ளத் தொடங்கியிருக்கிறது.

கடந்த வாரம் ரூ.1.26 லட்சம் கோடி மதிப்பில் மூன்று செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய சிப் தயாரிப்பு நிலவரம் எப்படி இருக்கிறது...

இந்தியாவில் அமையவிருக்கும் ஆலைகள்

# அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் நிறுவனம் மத்திய அரசு மற்றும் குஜராத் அரசின் நிதி உதவியுடன் ரூ.22,800 கோடி மதிப்பில் குஜராத்தில் செமிகண்டக்டர் அசெம்ப்ளி ஆலை அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கியது.
# டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தைவானின் பவர்சிப் செமிகண்டக்டர் நிறுவனத்துடன் இணைந்து ரூ.91 ஆயிரம் கோடி முதலீட்டில் குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்கிறது. இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை இதுவாகும்.
# டாடா செமிகண்டக்டர் அசெம்ப்ளி நிறுவனம் ரூ.27 ஆயிரம் கோடி முதலீட்டில் அசாம் மாநிலத்திலும், சிஜி பவர் நிறுவனம் ஜப்பானின் ரெனசாஸ் எலக்டரானிக்ஸ் மற்றும் தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.7,600 கோடி முதலீட்டில் குஜராத்திலும் செமிகண்டக்டர் அசெம்ப்ளி ஆலையை அமைக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in