

சிசேரியன் சிகிச்சை என்பது தாய்-சேய் உயிர்களைக் காக்கும் முக்கிய சிகிச்சை. இருப்பினும் அது குறித்த தவறான கற்பிதங்கள் சமூகத்தில் நிலவு கின்றன. மக்களில் ஒருசாரார் பணத்துக்காக மருத்துவர்கள் சிசேரியன்களை அதிகம் செய்கிறார்கள் என்கிற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறம், நல்ல நாள், நேரம் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்க சமகாலக் கர்ப்பிணிகள் பணிக்கிறார்கள். இதனால்தான் சிசேரியன் கூடுகிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இரண்டுமே முழு உண்மையன்று.
காரணங்கள்
மருத்துவ உலகில் தாய்-சேய் நலத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய சிகிச்சை முறைதான் ‘சிசேரியன்’. தேவைப்படுபவருக்குத் தேவைப்படும் நேரத்தில் இச்சிகிச்சையை மேற் கொண்டு தாய்-சேய் உயிரைக் காக்க முடிகிறது.
நார்மல் டெலிவரி - சுகப்பிரசவம் என்பது ‘பிறப்புறுப்பு வழியான பிரசவம்’ (Vaginal Delivery). மனிதர்களைத் தவிர ஏனைய பாலூட்டி கள் அனைத்தும் பிரச்சினையின்றிக் குட்டிகளை ஈனுவதாகவும் சிசேரியன் தேவையில்லாத சிகிச்சை என்றும் பிரச்சாரம் செய்யப் படுகிறது.
பெண்ணின் உடல மைப்பு ஏனைய பாலூட்டி களைப் போன்றது அல்ல. மாறாகப் பிரசவம், கர்ப்பத்தின்போது பல இடர்ப்பாடுகள் ஏற்படு கின்றன. பூனை, நாய், பசு, யானை, குதிரை, குரங்கு போன்ற வளர்ப்பு விலங்கினங்களிலும் அவசர சிகிச்சையாக சிசேரியன் செய்யப்படுவது உண்டு.
சிசேரியன் சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது? குழந்தையின் தலை, தோள்பட்டை உள்ளிட்டவை தாயின் இடுப்பெலும் பைத் தாண்டி வெளியே வர இயலாத நிலை (Cephalo Pelvic Disproportion) இருப்பது, குழந்தை தலைகீழாக இல்லாமல் குதம் கீழாக இருப்பது அல்லது பக்கவாட்டில் இருப்பது, தாயின் நஞ்சுப்பை கருப்பையின் கீழ்ப்புறம் இருப்பது, நஞ்சுக்கொடிக் குழந்தைக்கு முன்பே வெளி யேறி வந்து நிற்பது, பிறப்புக்காகக் குழந்தை முயலும்போது கருப்பை கிழிந்துவிடுவது, கருப்பைப் பனிக்குட நீரில் கிருமித் தொற்று ஏற்பட்டுவிடுவது, தாய்க்கு மிகக் குறுகலான இடுப்
பெலும்பு இருப்பது, கர்ப்பக் காலத்தில் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட்டு, அதன் விளைவாக வலிப்பு நோய் ஏற்படுவது, கூடவே கல்லீரல் கோளாறு ஏற்பட்டு ரத்த உறைதல் சிக்கலாவது, கருப் பையில் கட்டி இருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பது (Multiple Gestation), பிரசவிக்கும் காலம் தாமதமாவது போன்றவை முக்கியக் காரணங்கள்.
அடுத்த காரணம்
பொதுவாக 37 வாரங்களைக் கடந்த முதல்முறை கருவுற்ற கர்ப்பிணி, பனிக்குடம் உடைந்ததில் இருந்து அதிகபட்சம் 28 மணி நேரத்தில் குழந்தை யைப் பெற்றெடுத்து விடுவார். இதில் தாமதம் ஏற்படும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல், தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும். எனவே, நீண்ட தாமதமாகும் பிரசவத்துக்காகவும் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.