கைகொடுக்கும் நவீனத் தொழில்நுட்பம் | காடு என்ன சொல்கிறது? - 17

படங்கள்: செந்தில்குமரன்

படங்கள்: செந்தில்குமரன்

Updated on
2 min read

இந்தியாவின் காடு சார்ந்த கிராமங்களில், இரவு நேரம் என்பது பல குடும்பங்களுக்கு அச்சத்தின் நேரமாகவே மாறியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், அசாம், ஒடிஷா போன்ற மாநிலங்களில், உணவையும் தண்ணீரையும் தேடிக் காட்டைவிட்டு வெளிவரும் யானைகள் வேளாண் நிலங்களையும் குடியிருப்புகளையும் அடையும்போது, மனித–யானை எதிர்கொள்ளல் ஒரு பெரிய சமூக, சுற்றுச்சூழல் சவாலாகிறது.

இந்த எதிர்கொள்ளலின் மிகக் கடினமான பகுதி இரவுக் கண்காணிப்புதான். யானைகள் பெரும்பாலும் இரவில் நகர்வதால், வனத் துறையினர் முழு இரவும் விழித்திருந்து கிராம மக்களையும் யானைகளையும் பாதுகாக்கும் அபாயகரமான பணியில் ஈடுபடுகின்றனர்.

அடர்ந்த இருள், மழை, காட்டு நிலப்பரப்பு போன்ற சூழ்நிலைகளில் பணியாற்றுவது கடும் மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது.

அதேபோல், விவசாயிகளும் தங்கள் பயிர்களைக் காப்பாற்ற இரவு முழுவதும் வயல்களில் விழித்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.

பகலில் விவசாய வேலை, இரவில் கண்காணிப்பு என்கிற இரட்டைச் சுமை, பொருளாதார இழப்பு, தூக்கமின்மை ஆகியவை யானைகளின் மீது கோபத்தையும் வெறுப்பையும் மக்களிடையே உருவாக்குகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in