இரு தரப்புக்கும் உதவும் சூரிய வேலிகள் | காடு என்ன சொல்கிறது? - 15

இரு தரப்புக்கும் உதவும் சூரிய வேலிகள் | காடு என்ன சொல்கிறது? - 15
Updated on
2 min read

காட்டு எல்லைப் பகுதிகளில் மனிதர்–யானை எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. காடுகளுக்கு அருகிலுள்ள வேளாண் நிலங்கள் யானைகளின் இயற்கை வழித்தடங்களை ஒட்டியுள்ளதால், அவை உணவு தேடிக் கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது.

இதனால் பயிர்ச் சேதம், பொருளாதார இழப்பு, மனித உயிருக்கு அபாயம் போன்ற பல பிரச்சினைகள் உருவாகின்றன. இத்தகைய சூழலில் பாதுகாப்பான, நிலையான தீர்வாகச் சூரிய ஆற்றல் வேலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சூரிய ஆற்றல் வேலி என்பது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி, குறைந்த மின்னழுத்த அதிர்ச்சியாக வேலியில் செலுத்தக்கூடிய ஓர் அமைப்பு. இந்த வேலியை யானைகள் தொடும்போது, அவற்றுக்குத் தீங்கு இல்லாத அளவிலான மின் அதிர்வால், அவை பின்வாங்குகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in