ஜென் ஸீ கையில் தமிழ் மரபு | இளம் தொழில்முனைவோர்

ஜென் ஸீ கையில் தமிழ் மரபு | இளம் தொழில்முனைவோர்
Updated on: 
2 min read

தமிழர் மரபையும் சமகால ஃபேஷனையும் இணைத்து, கைவினை அணிகலன்களை உருவாக்கி வருகிறார் புதுச்சேரியைப் பூர்விகமாகக் கொண்ட இளம் தொழில்முனைவோர் மரியா ஜோஸ்லின் நிவேதிதா.

சென்னையை மையமாகக் கொண்டு ‘ஜல்கேசி’ (Zhalkesi) எனும் அணிகலன் தயாரிப்புத் தொழிலை நடத்திவரும் இவர், பாரம்பரியத்தின் அழகை ஜென் ஸீ தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

‘ஜல்கேசி’ என்றால்? பொறியியல் பட்டதாரியான மரியா, தகவல் தொழில்நுட்பத் துறையில் தரவுப் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்படியிருக்க, கலை சார்ந்த தொழில்முனைவோராக உருவெடுத்தது எப்படி? “சிறு வயது முதலே ஓவியம் வரை வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

அதே நேரம், கலை சார்ந்த குடும்பப் பின்னணி கிடையாது. அதனால் பொறியியல் படித்தேன். என்றாலும், கிரியேட்டிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆசை துரத்திக்கொண்டே இருந்தது.

பள்ளி, கல்லூரி நாள்களிலேயே காதணிகள் செய்வது, வாழ்த்து அட்டைகள் வரைவது எனப் பலவற்றை உருவாக்கி விற்பனை செய்திருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக, 2021இல் சுயமாகக் கற்றுக்கொண்டு ‘ஜல்கேசி’ எனும் அணிகலன் பிராண்டைத் தொடங் கினேன். சோழர் காலத்தில் அரச குடும்பத் தினர் அணிந்த ஓர் அணிகலனின் பெயர் ‘ஜல்’. அதனுடன் ‘குண்டலகேசி’யின் பிற்பகுதியான ‘கேசி’யை இணைத்து ‘ஜல்கேசி’ என்று பெயர் வைத்தேன்.

தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் எனக்கு அதிகப் பற்று உண்டு. அதனால், எங்களுடைய தயாரிப்புகளிலும் தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வடிவமைப்புகளை உருவாக்குகிறோம்.

கோலம், திருஷ்டி, சென்னை மாநகரம் சார்ந்த கருப்பொருள்களில் அணிகலன்களைத் தயாரிக்கிறோம். மோதிரம், காதணி, செயின் எனப் பல வகைகள் உள்ளன. ‘பெல்ட் சார்ம்’ என்கிற புதிய தயாரிப்பை யும் சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளோம்.

ஜீன்ஸ் பேண்ட்டில் அணிந்து கொள்ளக்கூடிய இந்த அணிகலன், குறிப்பாக ஜென் ஸீ தலைமுறையினரின் ஃபேஷன் விருப்பத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அடுத்து பொய்க் கால் குதிரை ஆட்டம் போன்று தமிழ் மரபுக் கலைகளை மையமாக வைத்து அணிகலன்களை டிசைன் செய்ய வேண்டுமென்கிற திட்டம் உள்ளது” என்கிறார் மரியா.

மறுவடிவமைப்பு

தொழில்முனைவின் தொடக்கக் காலத்தில் கைப்பட அணிகலன்களை உருவாக்கி விற்பனை செய்ய வேண் டும் என்பதே மரியாவின் திட்டமாக இருந்துள்ளது.

ஆனால், எந்தத்திசையில் தொழிலைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்ததால், அனுப வத்தின் மூலம் தனது பிராண்டின் தனித்துவத்தை உணர்ந்து, 2025இல் தொழிலை மறு வடிவமைப்பு (Rebranding) செய்துள்ளார்.

“தொழில் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்கிற புரிதல் வந்த பிறகுதான் ரீ-பிராண்டிங் செய்யத் தொடங்கினேன். அதன்பிறகு குறிப் பிட்ட கருப்பொருள்களின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்கத் தொடங்கினேன்.

இதற்காக இடைவெளி எடுக்காமல், தயாரிப்புகளின் எண்ணிக் கையையும் ஆர்டர்களையும் படிப்படி யாகக் குறைத்துக்கொண்டு ரீ-பிராண்டிங் பணிகளில் கவனம் செலுத்தினேன்.

அளவு பெரிதாக இருக்கக்கூடிய, பளிச்சென்று தோற்றம் அளிக்கக்கூடிய அணிகலன்களை விரும்புபவர்களுக்கு ஒரு பிரத்யேகத் தேர்வாக ஜல்கேசி இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

எளிதில் எங்கும் கிடைக்காத, தனித்துவ மான டிசைன்களாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். பாலிமர் கிளே (Polymer Clay) கொண்டு பெரும்பாலான அணிகலன்களைக் கைப்பட தயாரிக்கிறோம். உலோகப் பொருள்கள் பயன்படுத்தும்போது மட்டும் இயந்திரத்தின் உதவி தேவைப்படுகிறது.

ஒரு பொருளின் விலையை நிர்ண யிக்கும்போது மூலப்பொருள்களின் செலவுடன், அதைத் தயாரிக்க ஆகும் நேரத்தையும் கணக்கில் கொள்கிறேன். சில அணிகலன்களை உருவாக்க ஒரு மணி நேரமும், சிலவற்றுக்கு 18 மணி நேரமும்கூட ஆகிறது.

ஒரு பொருளின் விலையை நிர்ண யிக்கும்போது மூலப்பொருள்களின் செலவுடன், அதைத் தயாரிக்க ஆகும் நேரத்தையும் கணக்கில் கொள்கிறேன். சில அணிகலன்களை உருவாக்க ஒரு மணி நேரமும், சிலவற்றுக்கு 18 மணி நேரமும்கூட ஆகிறது.

அதற்கேற்ப உழைப்புக் கும் உரிய மதிப்பளித்து விலையை நிர்ணயிக்கிறேன்” என்கிறார் மரியா. வீட்டிலேயே ஸ்டுடியோ அமைத்து தொழிலை நடத்திவரும் மரியாவோடு இரண்டு பெண்கள் பணியாற்றுகின்றனர்.

எதிர்காலத்திலும் தனது நிறுவனத்தில் பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்!

‘ஜல்கேசி’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/zhalkesi/

- karthiga.rajendran@hindutamil.co.in

ஜென் ஸீ கையில் தமிழ் மரபு | இளம் தொழில்முனைவோர்
ஊர்களின் கதைகளைச் சொல்லும் கலை! | இளம் தொழில்முனைவோர்

X