சுதந்திரம் தந்த வெற்றி! | இளம் தொழில்முனைவோர்

சுதந்திரம் தந்த வெற்றி! | இளம் தொழில்முனைவோர்
Updated on: 
2 min read

மெழுகுவர்த்தி தயாரிப்பில் புதுமையாக என்ன செய்துவிட முடியும் என நினைக் கலாம். ஆனால், அழகியலையும் நறுமணத்தையும் இணைத்துப் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் மெழுகுவத்திகளை உருவாக்கி விற்பனை செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் சாந்த்னி.

கரோனாவுக்கு முன்

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந் தாலும், அதற்கான பாதை சாந்த்னிக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை. பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிற எண்ணம் நிலவிய சூழலுக்கு மத்தியில், தந்தை அளித்த ஊக்கம் அவருக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.

“பெண்கள் எதற்காக வேலைக் குச் செல்ல வேண்டும் என நினைப்ப வர்களுக்கு மத்தியில், என்னுடைய அப்பா என்னை ஊக்கப்படுத்தினார். சுயமாக இயங்க வேண்டும் என்று கூறினார். ஃபேஷன் டிசைனிங்கில் பட்டப் படிப்பு படித்தேன். வழக்கமான படிப்பாக அல்லாமல், இந்தப் படிப்பைத் தேர்வு செய்தபோதும் அப்பாவின் ஆதரவு இருந்தது.

ஆறு மாதங்கள் வேலைக்குச் சென்றேன். 2012ஆம் ஆண்டில் சொந்தமாக ‘ஸ்ப்லர்ஜ்’ (Splurge) எனும் துணி வியாபாரத்தைத் தொடங்கினேன்.

சில ஆண்டுகள் வியாபாரத்தை நிர்வகித்து வந்தேன். ஆனால், கரோனா வந்தபோது எல்லாமே தலைகீழானது. அப்போது வியாபாரத்தை மூடிவிட்டுச் சில மாதங்கள் இடைவேளை எடுத்தேன்.

மீண்டும் ‘ஸ்ப்லர்ஜ்’ பிராண்டை ’ரீவாம்ப்’ செய்தேன். கல்லூரிக் காலத்தில் நண்பர்களுக்காகவும் குடும்பத்தின ருக்காகவும் வீட்டிலேயே மெழுகு வத்தி தயாரித்து விற்பனை செய்திருக் கிறேன். அதையே மீண்டும் செய்யத் தொடங்கினேன்” என்கிறார்.

தொழிலுக்குப் புத்துயிர்

‘ஸ்ப்லர்ஜ்’ என்றால் பிடித்த விஷயங்களுக்காகச் செலவு செய்வது என்று பொருள். வீட்டிலேயே ஓர் அறையைத் தனது தொழிலுக்காக ஒதுக்கி, அங்கிருந்தபடியே ‘ஸ்ப்லர்ஜ்’ பிராண்டை மீண்டும் தொடங்கினார் சாந்த்னி. கரோனா காலத்தில் மெழுகுவத்தி தயாரிப்பு, நறுமணப் பொருள்கள் தயாரிப்பு ஆகிய வற்றைச் சுயமாகக் கற்றுக் கொண்டு, அவற்றில் தனது திறனை மேலும் மெருகேற்றிக் கொண்டுள்ளார்.

“மெழுகுவத்தி தயாரிப்பதோடு நின்றுவிடாமல் ரூம் ஸ்பிரே, வார் ட்ரோப் ஃபிரெஷ்னர், கார் டிஃப்யூசர் எனப் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினேன். உடலுக்குத் தீங்கு இல்லாத மூலப் பொருள்கள், வண்ணங்கள், நறுமணங்கள் என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினேன்.

கஸ்ட மைஸ்டு டிசைன்களிலும் கவனம் செலுத்தினேன். பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் பரிசாகக் கொடுக்கக் கூடிய வகையிலும் தயாரித்தேன். வீட்டிலிருந்தே பிசினஸை ரீவாம்ப் செய்து, பாப்-அப் நிகழ்வுகளுக்குச் செல்வது, சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்வது என மெல்ல மெல்லத் தொழிலை வளர்த்தேன்” என்கிறார்.

விதவிதமான நறுமணங்கள்

விதவிதமான நறுமணங்களை உரு வாக்குவதற்காக சாந்த்னி தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்கிறார். எந்த அளவு மூலப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும், எந் தெந்தப் பொருள்களை எந்த விகிதத்தில் கலந்தால் குறிப் பிட்ட நறுமணம் கிடைக்கும் என்பதை ஆய்வுசெய்து ஒவ்வொரு தயாரிப்பையும் சாந்த்னி உருவாக்குகிறார்.

“புதிய நறுமணங்களை உருவாக்கத் தொடர்ந்து ‘எக்ஸ்பிரி மென்ட்’ செய்வேன். சோயா மெழுகில் தயாரிக்கப்படும் ‘Scented Soy’ மெழுகுவத்தி களும், ‘Fragrance Bars’ பொருள்களும் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு கள். இவை தவிர, கலை நயத்துடன் உருவாக்கப்படும் ‘Artisanal Scented’ மெழுகுவத்திகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

வாடிக்கை யாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கஸ்டமைஸ்டு மெழுகுவத்திகளையும் தயாரிக்கிறோம். திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குப் பரிசுப் பொருள்களாகவும் பலர் வாங்கிச் செல்கின்றனர்” என்கிறார்.

அடுத்த திட்டம்

தற்போது தனியாக நிர்வகித்து வரும் தொழிலை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச்சென்று, ஒரு குழுவாக முன்னேறுவதற்கான பணிகளில் இறங்கியுள்ளார் சாந்த்னி. வியாபாரத்துக்கு எனத் தனியாகக் கடை தொடங் குவது அவ்வளவு எளிதல்ல என்பதால், அதற்கான சரியான திட்டமிடலில் கவனம் செலுத்திவருகிறார்.

“அம்மா, அப்பா, கணவர் எனக் குடும்பத்தினரின் ஆதரவுடன் தொழி லையும் குடும்பத்தையும் சமாளித்து வருகிறேன்.

அதேநேரத்தில், சுயமாகத் தொழில் செய்வதால் எந்தப் புராஜெக்ட்டை எடுக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நானே முடிவுசெய்யும் சுதந்திரம் எனக்கு உள்ளது. அதனால், எனக் கேற்ற வகையில் பணிகளைத் திட்ட மிட்டுச் செய்ய முடிகிறது” என்கிறார் சாந்த்னி.

’ஸ்ப்லர்ஜ்’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/splurge.in/

- karthiga.rajendran@hindutamil.co.in

சுதந்திரம் தந்த வெற்றி! | இளம் தொழில்முனைவோர்
கலையும் தொழிலாகும்! | இளம் தொழில்முனைவோர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in