

சென்னையைச் சேர்ந்த இளம் ஓவியரும் தொழில்முனை வோருமான ரிதி, கல்லூரிப் படிப்பின்போது தொடங்கிய ‘ஆர்ட் புராஜெக்ட்’டைப் பின்னாளில் பிசினஸாக மாற்றியிருக்கிறார். தான் வரைந்த ஓவியங்களை ஸ்டிக்கர்கள், அலங்காரப் பொருள்கள், கிஃப்ட் பொருள்கள், திருமண அழைப்பி தழ்கள் எனப் பல்வேறு வடிவங்களில் மாற்றி விற்பனை செய்துவருகிறார்.
கல்லூரியில் வரவேற்பு
ஓவியங்கள் வரைவதிலும் படைப்பாற்றலுடன் செயல்படு வதிலும் இளம் வயது முதலே ரிதிக்கு அதிக ஆர்வம். இதனால், பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸ் துறையில் இளங்கலைப் பட்டமும் ஃபேஷன் மேனேஜ் மென்ட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
கல்லூரி மாணவி யாக இருந்தபோது, தன்னுடைய புராஜெக்ட்டுக்காகத் தொடங்கிய ‘ஆட் டிரங்க்’ (Odd Trunk) இணையவழி வியாபாரத்தைக் கடந்த எட்டு ஆண்டு களாக நடத்திவருகிறார்.
“2018ஆம் ஆண்டு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் படித்தபோது கிராஜுவேஷன் புராஜெக்டுக்காக ‘ஆட் டிரங்க்’ என்கிற பெயரில் வியா பாரத்தைத் தொடங்கினேன்.
இந்தியப் பண்டிகைகளை மையமாகக் கொண்டு வரைந்த ஓவியங் களைச் சாவிக்கொத்து, ஃபிரிட்ஜ் மேக்னட் போன்று தயாரித்து விற்பனை செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, 2020இல் சொந்தமாக இணையத்தளம் ஒன்றைத் தொடங் கினேன்.
யானை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் ‘ஆட் டிரங்க்’ எனப் பெயர் வைத்து விட்டோம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்காகப் பிரத்யேகமாக ‘DIY’ பேப்பர் கொலு பொம்மைகள் அடங்கிய ‘கிட்’ ஒன்றை உருவாக்கினேன்.
இதற்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இத்துறையில் இயங்கத் தொடங்கி விட்டேன். ‘ஆட் டிரங்கில்’ ரூ.250 முதல் பொருள்கள் விற்பனையாகின்றன” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ரிதி.
கலைத்துறையில் ஏன்?
ஓவியம் வரையக் கற்றுக் கொண்டது முதல் வியாபாரத்தை நிர்வகிப்பதுவரை அனைத்தையும் சுயமாகக் கற்றுக்கொண்டு, படிப் படியாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டதாகச் சொல்கிறார் ரிதி. “சிறு வயதில் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவது மிகவும் பிடிக்கும்.
சொந்தமாக வியா பாரம் செய்யும்போது ‘கிரியேட்டிவ் ஃபிரீடம்’ இருக்கும். இதனால் பிசினஸில் முழு ஈடுபாட்டுடன் இயங்கத் தொடங்கிவிட்டேன். தற்போதைக்கு இணையத்தளம் வழி
யாகவும், ஓவியக் கடை களுக்கு என்னுடைய பொருள்களை விநியோகம் செய்தும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறேன்.
தனியாகக் கடை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புது டிசைன்களையும் பொருள்களையும் ‘அப்டேட்’ செய்துகொண்டே இருப்பேன். நானே தரக் கட்டுப்பாடு செய்து, நல்ல ஓவியங்களை மட்டும் இறுதி செய்வேன்” என்கிறார்.
செயற்கை நுண்ணறிவு ஒரு கருவியே
“தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் வழியாக ஆர்டர்கள் வந்தன. வாடிக்கையாளர்களுடன் கனெக்ட் ஆக முடிந்தது. ஆனால், போகப் போக அல்காரிதத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும், ஏஐ வந்த பிறகும் சமூக வலைத்தளத்தில் சலிப்பு தட்டிவிட்டது.
நாம் வழங்கும் தகவல்களில் இருந்துதான் ஏஐ பயிற்சி எடுக்கிறது. அதனால், ஒரு ஆர்ட் வொர்க்கை அப்லோடு செய்வதற்கு முன் ஓவியர்கள் உஷாராக இருக்க வேண்டும். வாடிக்கையாளரிடம் இதை வாங்க வேண்டும், அதை வாங்க வேண்டாம் எனச் சொல்ல முடியாது.
ஆனால், ஏஐயில் உருவாக்கப்பட்ட படைப்புக்கும் ஒரிஜினல் படைப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டுமென்கிற அளவுக்கு வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும். ஏஐ ஒரு கருவியே தவிர, முழுமையாக அதைச் சார்ந்து இயங்கக் கூடாது” என்கிறார்.
விருப்பத்திற்கேற்ற வடிவமைப்பு
பாரம்பரியமான திருமண அழைப்பிதழ்களோடு ஒப்பிடும்போது, வாடிக் கையாளர்கள் விரும்பும் வகையிலான திருமண அழைப்பிதழ்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. அவற்றை வடிவமைப்பதில் ரிதி கில்லாடி.
“திருமணம், பிறந்தநாள் போன்ற சிறப்பு நாள்களுக்கான அழைப்பிதழ்கள் எனும்போது கலர், டிசைன் ஆகியவற்றுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண அழைப்பிதழ்களைப் பெரும்பாலும் ஒரே ‘டெம்ப்ளேட்’டில் ஒரே மாதிரியான டிசைனில் மட்டுமே காண முடிந்தது. ஆனால், தற்போது கிரியேட்டி வாகவும் தனித்துவமாகவும் இருக்க விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயமே” என்கிறார் ரிதி.
‘ஆட் டிரங்க்’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/oddtrunk/
- karthiga.rajendran@hindutamil.co.in