சர்வதேசம்: கல்வி உதவித் தொகை

சர்வதேசம்: கல்வி உதவித் தொகை
Updated on
1 min read

புத்தாண்டில் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், புதிய சான்றிதழ் படிப்புகள், இன்டர்ன்ஷிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். சர்வதேச அளவிலான இரண்டு கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரம்:

ஆஸ்பயர் லீடர்ஸ் புரோகிராம்: அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஆஸ்பயர் இன்ஸ்டிடியூட் இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், துருக்கி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது.

18 வயது முதல் 29 வயதுக்கு உள்பட்டு இளங்கலைக் கல்லூரிப் படிப்பு பயின்று வருபவர் அல்லது கல்லூரிப் படிப்பை முடித்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருப்பது அவசியம். இதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்படுபவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பயிற்சி மாதிரிகள், நேரலை வகுப்புகள் போன்று சில வகுப்புகளைப் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் இணையவழியில் ஜனவரி 23ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துக்கான சுட்டி: https://www.aspireleaders.org/

ஜான் வில்லெட் இன்டர்நேஷனல் உதவித்தொக: ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிய மாணவர்களுக்கான ஜான் வில்லெட் இன்டர்நேஷனல் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படு கின்றன. இளங்கலைப் படிப்பு முடித்து முதுநிலை படிக்க விரும்பும் மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இளங்கலைப் படிப்பில் குறைந்தது 4.0 ஜி.பி.ஏ. பெற்றிருப்பது அவசியம்.

கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் உள்ள பிசினஸ் பள்ளியில் முதுகலை சர்வதேச வளர்ச்சி பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 50% வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்களில் இருந்து நிபுணர் குழு தேர்வு செய்யும் தகுதியானவர்களுக்கே உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் இணையவழியில் ஜனவரி 26ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துக்கான சுட்டி: https://shorturl.at/hVo4M

சர்வதேசம்: கல்வி உதவித் தொகை
காலத்துக்குத் தேவையான விளையாட்டுச் சட்டப் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in